பிரான்சில் மாணவர் ஒருவரின் வெறிச்செயல்... கடும் நடவடிக்கைக்கு பிரதமர் அழைப்பு
பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் தனது பள்ளியில் நான்கு மாணவர்களை கத்தியால் தாக்கியுள்ள சம்பவத்தில், ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூவர் காயமடைந்தனர்.
ஆணையம் ஆராயும்
குறித்த சம்பவத்தில் 15 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் ஒரு மாணவி கொல்லப்பட்டதுடன், ஒரு மாணவி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரின் வெறிச்செயல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, இந்த துயரச் சம்பவம், நமது இளைஞர்களின் ஒரு பகுதியில் நிலவும் வன்முறையை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது என்றார்.
மேலும், பள்ளிகளுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் சோதனைகளை உடனடியாகத் தீவிரப்படுத்த அவர் உத்தரவிட்டார்.
ஆயுத விற்பனை, கத்திகளை சொந்தமாக வைத்திருத்தல் மற்றும் எடுத்துச் செல்வது போன்ற இளைஞர்களிடையே அதிகரித்துள்ள கத்தி குற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒரு ஆணையம் ஆராயும் என்றும் அவர் கூறினார்.
உளவியல் பரிசோதனை
இதனிடையே, பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்திலும் துயரத்திலும் முழு தேசமும் பங்கு கொள்வதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பொலிசார் தெரிவிக்கையில், பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு மாணவனை முதலில் குறிவைத்து,
பின்னர் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்த மற்ற மூன்று பேரை அந்த சிறுவன் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் இரண்டு வகுப்பறைகளுக்கு சென்றதாகவும், ஒன்றிற்கும் மேற்பட்ட கத்தி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பொலிஸ் காவலில் இருக்கும் அந்த சிறுவனுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தாக்குதல் நடந்த பள்ளிக்கு கல்வி அமைச்சரும் உள்விவகார அமைச்சரும் பார்வையிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |