பிரித்தானியாவில் M1 பகுதியில் லொறி-கார் மோதி விபத்து: 27 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 27 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெடுஞ்சாலை விபத்து
பிரித்தானியாவில் M1 சாலை பகுதியில் லொறி மற்றும் கார் ஒன்று மோதிய சம்பவத்தில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டியது மற்றும் போதையில் வண்டி ஓட்டியது ஆகிய குற்றத்தின் கீழ் 47 வயது ஆண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதை அடுத்து நாட்டிங்ஹாம்ஷையர் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான அறிக்கை ஒன்றில், M1 பகுதியில் சந்திப்பு 26 மற்றும் 27க்கு இடையே சனிக்கிழமை அதிகாலை 4.04 மணிக்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து சாலை 12 மணி நேரம் மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கூடுதல் விசாரணைக்காக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் வேண்டுகோள்
நாட்டிங்ஹாம்ஷையர் காவல்துறை அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், விபத்து குறித்து விவரம் தெரிந்தவர்கள் அல்லது விபத்து தொடர்புடைய டாஷ் கேம் காட்சிகள் வைத்து இருப்பவர்கள் பொலிஸாரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |