வீட்டில் துப்பாக்கி சூடு காயங்களுடன் கிடந்த 2 ஆண்கள்: கனடாவில் அரங்கேறியுள்ள சோகம்!
கனடாவில் நேற்று இரவு வடகிழக்கு கல்கரி பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம்
கனடாவின் வடகிழக்கு கல்கரியில்(Calgary) கோரல் ஸ்பிரிங்ஸ்(Coral Springs) பகுதியில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின் பின்னணி
கல்கரி காவல் துறையினருக்கு, கோரல் ஸ்பிரிங்ஸ் வட்டம் N.E. பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு சுமார் 10:35 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவசர அழைப்பு வந்தது.
விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இரண்டு ஆண்கள் ஆபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.
இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் விசாரணை
முதற்கட்ட விசாரணையில், இரு நபர்களும் துப்பாக்கி சூடு நடந்த வீட்டில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் வேறு யாரும் சந்தேகத்திற்குரிய நபர்களாக தற்போது கருதப்படவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தீவிர விசாரணை நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |