தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சோகம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
தெற்கு லண்டனில் உள்ள ஸ்டாக்வெல் டியூப் ஸ்டேஷன்(Stockwell Tube Station) அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரடைஸ்(Paradise) சாலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, பெருநகர காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
என்ன நடந்தது?
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனை கண்டுபிடிக்கப்பட்டு, அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
ஆனால் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் மருத்துவ பணியாளர்கள் தீவிர முயற்சி செய்த போதிலும், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு வலைவீச்சு
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பெருநகர காவல்துறை உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் அடையாளம் காணும் பணியிலும், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணியிலும் துப்பறியும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த துயரமான சம்பவம் உள்ளூர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவத்தின் முழு விவரங்களையும் அறிய, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது மற்றும் சாட்சிகளிடம் விசாரணை செய்வது உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |