மலேசியாவின் உயரமான சிகரத்தில் ஏறிய பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி
மலேசியாவின் உயரமான சிகரத்தில் ஏறுவதற்காக, இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
மீட்புக் குழுவினருக்கு வந்த அழைப்பு
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் மலேசியாவிலுள்ள Mount Kinabalu. பிரபல சுற்றுலாத்தலமான அந்த சிகரத்தில் ஏறுவதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார்.
Image: PA
திடீரென அவர் கடுங்குளிரால் ஏற்படும் பாதிப்பான ஹைப்போதெர்மியா, மற்றும் ஆக்சிஜன் குறைவான உயரமான இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் Altitude sickness ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.45 மணியளவில் 4,095 மீற்றர் உயரமுடைய அந்த மலையிலிருந்து மீட்புக் குழுவினருக்கு அழைப்புவந்துள்ளது.
Image: Newsflash
அதைத் தொடர்ந்து, அங்கு சென்ற மீட்புக் குழுவினர் அந்த இளம்பெண்ணை மீட்டு கிழே கொண்டுவந்துள்ளனர். பாதி தூரம் ஸ்ட்ரெச்சர் ஒன்றிலும், மீதி தூரம் முதுகிலும் சுமந்து அந்த இளம்பெண்ணை கீழே கொண்டுவந்துள்ளார்கள் அவர்கள்.
மருத்துவமனையில் அனுமதி
Ranau என்னுமிடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அந்த இளம்பெண் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Image: Newsflash
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |