சொத்துத்தகராறு... கோடீஸ்வரரின் மனைவிக்கு நேர்ந்த கதி
சொத்துத்தகராறு காரணமாக தனது தந்தையின் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டதாக பொலிசில் சரணடைந்தார் பெல்ஜியம் நாட்டவர் ஒருவர்.
கோடீஸ்வர தம்பதி
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Verbier என்ற இடத்தில் சுமார் 20 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள், மிரியம் (Myriam Ullens de Schooten, 70), மற்றும் கய் Guy Ullens de Schooten, 88) தம்பதியர்.
பெல்ஜியம் நாட்டின் செல்வந்தர் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் கய். தம்பதியர் தற்போது Ohain என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
இந்நிலையில், சென்ற மாதம் 29ஆம் திகதி, காரில் அமர்ந்திருந்த மிரியம், கய் தம்பதியரை, கய்யின் மகனான நிக்கோலஸ் (Nicolas Ullens, 58) துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதில் மிரியம் உயிரிழந்துவிட, காலில் காயம் பட்ட கய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Picture: Bertrand Rindoff Petroff/Getty Images
சொத்துத் தகராறு
நிக்கோலஸ் பொலிஸ் நிலையம் சென்று, தான் சொத்துத் தகராறில் தன் சித்தியைக் கொன்றுவிட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார்.
நிக்கோலஸின் தந்தையான கய்யின் சொத்து மதிப்பு, 2011 நிலவரப்படி 3 பில்லியன் யூரோக்களாகும்.
மேலும், நிக்கோலஸ் முன்னாள் உளவுத்துறை அலுவலர் என்பது குறிப்பிடத்தக்கது.
Picture: Facebook; Getty