இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை: உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்
பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.
இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தை தொடர்ந்து அவமதித்துவந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
மன்னர் சார்லசுக்கும், இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னராவது குடும்பம் ஒன்றிணையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ளார் இளவரசர் ஹரி. அவர் தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிசியாக இருப்பதால் ஹரியை சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்
ஆனால், ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் கைவிட்ட நிலையில், அவர் இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என உதவிக்கு ஓடோடிவந்துள்ளது ஹரியின் தாயான இளவரசி டயானாவின் குடும்பம்.
ஆம், இளவரசி டயானாவின் அக்காவான Lady Jane Fellowes (67)ம், டயானாவின் தம்பியான Earl Spencer (59)ம், ஹரி பங்கேற்கும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின் பத்தாவது ஆண்டு விழாவில் ஹரிக்கு ஆதரவாக பங்கேற்க வந்திருந்தார்கள். அவர்களை கட்டியணைத்து வரவேற்றார் ஹரி.
அவர்கள் மட்டுமின்றி, ஹரியின் தாய்வழி சகோதர உறவின்முறையாரான George McCorquodale (39), Louis Spencer (30) மற்றும் Lara Spencer (18)ம் கூட அந்த விழாவில் பங்கேற்றதுடன், அவர்கள், ஹரி அமர்ந்திருந்த இடத்தின் பின்னாலேயே அமர்ந்திருந்தார்கள்.
ஆக, தந்தை கைவிட்டாலும், தாய் வழி உறவினர்கள் நாங்கள் இருக்கிறோம் என ஹரிக்கு நிரூபித்துவிட்டார்கள் டயானாவின் உறவினர்கள். விழாவில் பங்கேற்ற டயானாவின் நண்பர்கள் உட்பட சிலர், இந்த கருத்தை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டது நெகிழவைப்பதாக அமைந்திருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |