லண்டன் வீட்டில் கொலை செய்யப்பட்ட தந்தை மற்றும் மகள்! அவர்களின் முதல் புகைப்படம் வெளியானது
லண்டனில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகளின் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Wood Greenல் உள்ள வீட்டில் வசித்து வந்த Joanilason Assis (61) மற்றும் அவரின் 31 வயதான மகள் Fernanda Assis ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் இருவருக்கும் அவசர முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் அவர்கள் இறந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த Joanilason Assis மற்றும் Fernanda Assisன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் Achilleas Costa (52) என்பவரை ஏற்கனவே கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் வைக்கப்பட்டுள்லார்.
அடுத்த மாதம் 18ஆம் திகதி மீண்டும் Old Bailey நீதிமன்றத்தில் Achilleas ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது.