விமான விபத்தில் சிதைந்த குடும்பம்: கணவர், மகன்களை இழந்த பெண் சோக பதிவு
Family of three died in plane crash: அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்தில் கணவர், மகங்களை பறிகொடுத்த பெண் உருக்கமான அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மலைப்பகுதியில் சிறிய விமான விபத்து ஏற்பட்டதில், தந்தை மற்றும் 13,15 வயது மகன்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் உருக்கமான அஞ்சலியை பகிர்ந்துள்ளனர்.
கொலராடோ மலைப்பகுதியில்
அமெரிக்காவின் கார்ஃபீல்ட் கவுண்டியில் உள்ள நியூ கேஸில் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் ஹெண்ட்ரிக்சன் (46).
இவர் சனிக்கிழமையன்று, கொலராடோ மலைப்பகுதியில் உள்ள Gunnison தேசிய வனப்பகுதியின் Swampy Pass அருகே, சிறிய ரக விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் 15 வயது மகன் ஆலன் மற்றும் 13 வயது மகன் கேஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக விமானம் விபத்திற்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர். Gunnison கவுண்டி அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கணவர், மகன்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நிலைகுலைந்த மார்க்கின் மனைவி ஜென்னி, சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் இந்தத் துயரமான விபத்து தனது ஒட்டுமொத்த உலகத்தையே சிதைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.