600 ரூபாயை திருப்பி தராத மகளின் கழுத்தை அறுத்த தந்தை! மனைவியுடன் கைது
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ரூ.600க்காக மகளின் கழுத்தை தந்தையே அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் சஞ்சய் குப்தா. இவரது மகள் பூர்த்தி குப்தா (24) கடந்த வியாழக்கிழமை அன்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
அடையாளம் தெரியாத நபர் தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சஞ்சய் குப்தாவும், அவரது மனைவி வந்தனா குப்தாவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் சஞ்சய் குப்தா தான் குற்றவாளி என தெரிய வந்தது. மகளுக்கு சஞ்சய் குப்தா ரூ.600 கொடுத்துள்ளார்.
அதனை திருப்பி கேட்டபோது பூர்த்தி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குப்தா இரவு மகள் தூங்கும்போது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்தும் வந்தனா குப்தா பொலிஸிடம் புகார் கூறாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில் சஞ்சய் குப்தா, வந்தனா குப்தா இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |