மகனுக்கு காலணி வாங்க நன்கொடை சேகரித்த தந்தை.., ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்று அசத்திய மகன்
தந்தை ஒருவர் கிராம மக்களிடமிருந்து நன்கொடைகளை சேகரித்து தனது மகனுக்கு காலணிகள் வாங்கியுள்ளார்.
தங்க பதக்கம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், காஜிப்பூரைச் சேர்ந்தவர் திவாகர் பாஸ்வான். இவர் சமீபத்தில் பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (SAI) மையத்தில் நடைபெற்ற அகில இந்திய இன்டர் SAI தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த சீசனில் அவரது சிறந்த நேரம் 47.20 வினாடிகள் ஆகும். இது அவரை உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அருகில் கொண்டு செல்லும்.

மார்ச் 31 -க்குள் Post Office-ன் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் ரூ.1.5 லட்சம் வரை வரி சேமிக்கலாம்
இதில் திவாகரின் தந்தை வீரேந்திர பாஸ்வான், கிராம மக்களிடமிருந்து நன்கொடைகளை சேகரித்து தனது மகனுக்கு காலணிகள் வாங்கியுள்ளார். இதனால் திவாகரின் சாதனை அவரது முழு கிராமத்திற்கும் பெருமையான தருணம் ஆகும்.
மேலும் திவாகர் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தான் அவரது தந்தையின் கனவாகும். பயிற்சியாளர்கள் சந்திரபன் யாதவ், சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிர்மல் குமார் ஷாஹி ஆகியோரின் மேற்பார்வையில் திவாகர் ஓடத் தொடங்கினார்.
கிராம மக்களின் ஆதரவுடன் தனது கனவை நிறைவேற்றிய திவாகர், பல மாநில அளவிலான போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.
2023 ஆம் ஆண்டில், பள்ளி மாநில,தேசிய மற்றும் ஜூனியர் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
2024 ஆம் ஆண்டில் உ.பி. மாநில 23 வயதுக்குட்பட்டோர் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இவர் பட்டப்படிப்புடன், தடகளத்திலும் ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் என்று கனவோடு உள்ளார். தற்போது வாரணாசியில் தங்கி தனது கனவுகளை நனவாக்கத் தயாராகி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |