கனடாவில் பிள்ளைகள் கண் முன்னே தாக்கப்பட்ட தந்தை: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர் ஒருவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கனடாவின் மொன்றியலில், பூங்கா ஒன்றில் 32 வயது நபர் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த நபரை, அவரது பிள்ளைகள் கண் முன்னே மற்றொரு நபர் சரமாரியாகத் தாக்க, அந்தப் பிள்ளைகள் கதறியழும் காட்சி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வீடியோவைக் காண ; https://x.com/mayerfeig/status/1953934217735537075
இந்த சம்பவத்துக்கு மொன்றியல் மேயர், கனடா ஃபெடரல் சுகாதாரத்துறை அமைச்சர், கியூபெக் இனவெறுப்புக்கு எதிரான துறை அமைச்சர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் தாக்குதல் நடத்திய அந்த நபரைத் தேடிவருகிறார்கள். இதுவரை அவர் சிக்கவில்லை என செய்திகள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |