மேக் அப் போட்டதற்காக மகளை பயங்கரமாக அடித்துத் துவைத்த தந்தை: மகள் எடுத்த நெகிழவைக்கும் முடிவு
பிரித்தானியாவில் ஒரு இளம்பெண் மேக் அப் போட்டதற்காக அவளது தந்தை அவளை மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.
தேர்வுக்கு புறப்பட்ட மகள்
மான்செஸ்டரில் வாழ்ந்துவந்த அந்த 15 வயது மாணவி, English GCSE தேர்வு எழுதுவதற்காக தயாராகியுள்ளார். அவளது ஆசிரியைகள் அவளை சீக்கிரம் பள்ளிக்கு வரச் சொல்லியதால் அவள் சீக்கிரமாக பள்ளிக்குச் சென்றிருக்கிறாள்.
ஆனால், அவளும் அவளது தந்தையும் பள்ளிக்குச் செப்றபோது, பள்ளியின் கதவுகள் திறந்திருக்கவில்லையாம். அதைக் கண்ட அவளது தந்தையான ஹுசேன் (Hussein Alinzi, 59), அவள் யாரோ ஒரு பையனை சந்திப்பதற்காகத்தான் சீக்கிரம் வந்ததாகவும், அதற்காகத்தான் மேக் அப் போட்டிருப்பதாகவும் கூறி இரும்புக் கம்பியால் அவளை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
Credit: Cavendish
உண்மையில், ஏற்கனவே தன் தந்தை தன்னை அடித்த தழும்புகள் தெரியாமல் இருப்பதற்காகத்தான் அவள் மேக் அப் போட்டிருக்கிறாள்.
மருத்துவர்கள் கண்டுபிடித்த உண்மை
கடுமையாக அடிவாங்கியும், அதையும் தாங்கிக்கொண்டு தேர்வு எழுதச் சென்றிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால், பள்ளியில் வைத்து அவளுக்கு தலைசுற்றலும் மயக்கமும் ஏற்படவே, அவளை ஆசிரியைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் உடலில் தலை முதல் கால் வரை 14 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, விசாரணையில், அவள் இரண்டு வருடங்களாக அவளது தந்தையால் தாக்கப்பட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து அவளது தந்தையான ஹுசேன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
Credit: Cavendish
மகள் செய்த நெகிழவைக்கும் செயல்
இது நடந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி. இந்நிலையில், அந்த பெண், நீதிமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவளது தந்தை தனது தண்டனையை சிறையில் அனுபவிக்கவேண்டாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
அதற்கு பதிலாக 80 மணி நேர ஊதியமில்லாத வேலை போன்ற சில தண்டனைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
தன் தம்பி, தன் தந்தையை மிஸ் பண்ணுவதாகவும், அவர் இல்லாததால் தன் தாய் தன் தம்பியை கவனித்துக்கொள்ள கஷ்டப்படுவதாகவும், தன் தந்தை இப்போது மாறிவிட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கவேண்டாம் என்றும் அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |