80 வயதில் பெரும் கோடீஸ்வரரான நபர்... அவரது மகன் நடத்தும் நிறுவனத்தின் மதிப்பு ரூ 21,923 கோடி
80 வயதில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தவர் லலித் கைதான். இவரது மகன் அபிஷேக் கைதான் மூன்றாம் தலைமுறை தொழிலதிபர்.
80 வயதில் பெரும் கோடீஸ்வரர்
Radico Khaitan மதுபான நிறுவனத்தின் தலைவரான லலித் கைதான் என்பவர் தான் தமது 80 வயதில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
ஜூலை 8ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், லலித் கைதானின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 9,180 கோடி என்றே கூறப்படுகிறது. தற்போது Radico Khaitan நிறுவனத்தை அபிஷேக் கைதான் முன்னெடுத்து நடத்துகிறார்.
இவர் பொறுப்பேற்ற பின்னர் அறிமுகமான 8 PM விஸ்கி, மேஜிக் மொமென்ட்ஸ் ஓட்கா மற்றும் கான்டெசா ரம் ஆகியவை மது விரும்பிகளிடையே பிரபலம். தற்போது Radico Khaitan நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 21,923 கோடி என்றே கூறப்படுகிறது.
டெல்லியை சேர்ந்த இந்த நிறுவனம் தொடக்கத்தில் மதுவை போத்தல்களில் நிரப்பி அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் பெருமளவில் மது தயாரிக்கவும், அதன் பின்னர் தங்களுக்கான பிராண்டுகளை உருவாக்கவும் தொடங்கினர்.
15 வெற்றிகரமான பிராண்டுகள்
1997 முதல் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியுள்ளார் அபிஷேக். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக நிதி மற்றும் கணக்கியல் பட்டம் பெற்றவர். Radico Khaitan-ல் அபிஷேக் அறிமுகம் செய்த முதல் பிராண்ட் என்பது 8 PM விஸ்கி.
அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே விற்பனையில் சாதனை படைத்துள்ளது. மட்டுமின்றி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்துடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, அவர் 15 வெற்றிகரமான பிராண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மது விரும்பிகளின் அடுத்த தெரிவு ஓட்கா என்பதை தெரிந்து கொண்டு, தங்கள் நிறுவனத்தில் இருந்து மேஜிக் மொமென்ட்ஸ் ஓட்காவை அறிமுகம் செய்தார். மார்பியஸ் பிரீமியம் பிராந்தியும் இவர்கள் தயாரிப்பு தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |