திவாலான குடும்ப தொழில்... தாயாரிடம் கடன் வாங்கிய ரூ 50,000: இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனம்
மும்பையை சேர்ந்த Rounit Gambhir தடைகள் பல கடந்து, இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனத்திற்கு உரிமையாளராக மாறியுள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடி
தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்று Artedz Fabs Limited நிறுவனம். ஆனால் 2020 ஆகஸ்டு மாதம் நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
தேசிய அளவில் இந்த தகவல் கவனம் பெற்றது. மட்டுமின்றி, கடும் பொருளாதார நெருக்கடிக்கு Rounit Gambhir குடும்பத்தை தள்ளியது. அப்போது வெறும் பட்டப்படிப்புடன் தாயாரிடம் இருந்து கடனாக வாங்கிய ரூ 50,000 முதலீட்டுடன் புதிய பயணத்தை தொடங்கினார் Rounit Gambhir.
அப்படியே சமைத்து சாப்பிடலாம் என்ற வகையான உணவுகளை தயாரித்து வழங்கும் Chefling என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்க Rounit Gambhir திட்டமிட்டார். ஆனால் தம்மிடம் இருக்கும் முதலீடு அதற்கு போதுமானதாக இல்லை.
சர்வதேச அளவில் கொண்டுசெல்லவும்
மீண்டும் தாயாரை நாடிய அவர், அதிகமாக ரூ 1 லட்சம் கடனாகப் பெற்றார். தற்போது Chefling நிறுவனம் பரவலாக அறியப்படுவதுடன், ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் பயன்படுத்தும் வகையிலும் உருவாகியுள்ளது.
மட்டுமின்றி, Amit Jain, Azhar Iqbal, Namita Thapar, மற்றும் Piyush Bansal ஆகிய பிரபலங்கள் நால்வர் முதலீடு செய்ய முன்வந்துள்ளதை அடுத்து, தற்போது Chefling நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.5 கோடி என அதிகரித்துள்ளது.
Chefling நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமான உணவு வகைகளை அதே தரத்தில் குடியிருப்பு சமையலறைகளில் தயாரிக்கும் பொருட்டு வழங்கி வருகிறது.
மேலும், Chefling நிறுவனத்தை சர்வதேச அளவில் கொண்டுசெல்லவும், இந்திய உணவு வகைகளை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தவும் Rounit Gambhir திட்டமிட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |