ஆம்புலன்ஸ் இல்லாததால் மகனுடைய உடலை பையில் வைத்து கொண்டு சென்ற நபர்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தன் குழந்தையின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பை ஒன்றில் வைத்து பேருந்தில் கொண்டு சென்ற விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
மகனுடைய உடலை பையில் வைத்து கொண்டு சென்ற நபர்
ஜார்க்கண்டிலுள்ள பால்ஜோதி என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் டிம்பா சட்டோம்பா (Dimba Chatomba) என்னும் நபரின் மகனான நான்கு மாதக் குழந்தைக்கு வெள்ளிக்கிழமையன்று உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

டிம்பா உடனடியாக மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
மகன் உயிரிழந்ததும், பை ஒன்றை வாங்கி, மகன் உடலை அந்தப் பையில் வைத்துக்கொண்டு பேருந்து ஒன்றில் ஏறி டிம்பா வீட்டுக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
ஒரு பக்கம், டிம்பா மருத்துவமனையில் யாரிடமும் சொல்லாமல் தன் மகன் உடலை எடுத்துக்கொண்டுவந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்னொரு பக்கம், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாததாலேயே அவர் தன் மகனை பையில் வைத்து எடுத்துவந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் ஜார்க்கண்டில் அரசியலாகியுள்ள நிலையில், டிம்பா மருத்துவமனையில் யாரையாவது அணுகியிருந்தால் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம் என இணை ஆணையரான சந்தன் குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட நிர்வாகம் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |