பிரித்தானியாவில் மகனை கொன்ற தந்தை: இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற விசாரணை
பிரித்தானியாவில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகனை கொன்ற தந்தை
பிரித்தானியாவின் சோமர்செட்டில்(somerset) ஒரு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையின் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
38 வயதான டோனி பார்ட்லெட்(Tony Bartlett), தனது ஒரு மாத மகன் அட்டிகஸ் பார்ட்லெட்டை(Atticus Bartlett) கொலை செய்த குற்றச்சாட்டில் அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி சோமர்செட்டின் சார்ட் நகரில் நடந்துள்ளது.
இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற விரிவான விசாரணைக்குப் பிறகு, ஏவோன் மற்றும் சோமர்செட் பொலிசார்(Avon and Somerset Police) பார்ட்லெட் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
பார்ட்லெட்டின் ஆரம்ப நீதிமன்ற விசாரணை செவ்வாயன்று யோவில் மாஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் புதனன்று பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்று ஏவோன் மற்றும் சோமர்செட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |