மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை: சுவிட்சர்லாந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
சுவிஸ் மாகாணம் ஒன்றில், தந்தை ஒருவர் தன் மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் மாகாணமான St. Gallenஇல், 54 வயது ஆண் ஒருவர், தனது 12 வயது மகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு தந்தையும் மகளும் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது, அந்த நபரின் மனைவியான 42 வயது பெண்ணும், தம்பதியின் மூத்த மகளான 14 வயது சிறுமியும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
தகவலறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள அவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
தம்பதியர் அந்த வீட்டில் 10 ஆண்டுகளாக வாழ்ந்துவருவதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்ததுபோல் தோன்றியதாகவும் தெரிவித்துள்ள அக்கம்பக்கத்தவர்கள், இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
சரியாக என்ன நடந்தது என்பது குறித்து அறிவதற்காக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், சம்பவத்தில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்கள்.