அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் மனவேதனை தரும் சம்பவம்: தந்தையும் மகளும் கைது
Father and daughter are detained at Seattle airport: தந்தையும் மகளும் சியாட்டில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியாட்டலில் உள்ள ஒரு விமான நிலையத்தில், முகமூடி அணிந்த குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளால் தந்தையும் மகளும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசா காலம்
சியாட்டல்-டாகோமா சர்வதேச விமான நிலையத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானப் பயணத்திற்கு முன்னதாகத் தனது மகளை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் பணி அனுமதி இருப்பதாகவும் ஒரு பெண் அலறிய சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் குறைந்தது ஒருவரையாவது இழுத்துச் செல்வது அந்தச் சம்பவத்தின் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், ICE வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
நமது நாட்டின் சட்டங்களை மீறி, தனது விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த மெக்சிகோவைச் சேர்ந்த குடியேறியான ரிக்கார்டோ லரோண்டோ மெண்டோசாவைக் கைது செய்வதற்காக, தங்களது அதிகாரிகள் திட்டமிட்ட அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
தேங்க்ஸ்கிவிங் விடுமுறைக்கு முன்னதாக, பயணிகள் அதிகம் வரும் வார இறுதியில் நடைபெற்ற இந்த அமலாக்க நடவடிக்கை குறித்து ICE அதிகாரிகள் முன் அறிவிப்பு எதுவும் வழங்கவில்லை என அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை அலாஸ்கா விமானம் 1306-ல் பயணிகள் ஏறும் போது நடந்த சட்ட அமலாக்க நடவடிக்கை குறித்து கவலை கொண்டுள்ளோம் எனவும் அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்த அதிகாரிகள், அடையாளம் காட்டாத ஜாக்கெட்டுகளையும் காக்கி நிற கால்சட்டைகளையும் அணிந்திருந்தனர். கோடைக்காலம் முதல் விமான நிலையங்களில் ICE கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது, குறிப்பாக கடந்த காலங்களில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தவர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மன உளைச்சலை
இதனிடையே, விமான நிலையத்தை நிர்வகிக்கும் சியாட்டில் துறைமுகத்துடன் இணைந்து, நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை அறியப் பணியாற்றி வருவதாகவும், மேலும், உரிய அதிகாரிகளிடம் நேரடியாகத் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளதாகவும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மற்ற பயணிகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என்றும், என்ன நடந்தது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்வதற்காக உள்ளூர் அதிகாரிகள் ஃபெடரல் அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பார்கள் என்றும் சியாட்டில் துறைமுகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாஷிங்டன் ஆளுநர் பாப் பெர்குசன், ICE-இன் நடவடிக்கைகள் முற்றிலும் அமெரிக்கத் தன்மைக்கு எதிரானவை என்று கூறியதுடன், அந்த அமைப்பைக் கலைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.