வீட்டிற்குள் நுழைந்த புலியை பதற்றம் அடையாமல் பிடித்துக் கொடுத்த தந்தை-மகள்
திடீரெனெ வீட்டிற்குள் நுழைந்த புலியை பதற்றம் அடையாமல் புத்திசாலித்தனமாக பிடித்துக் கொடுத்த தந்தை-மகளுக்கு விருது வழங்கி அரசு கௌரவித்துள்ளது.
தந்தை-மகளுக்கு விருது
இந்திய மாநிலமான ஜார்கண்ட், ராஞ்சி அருகே உள்ள மர்து கிராமத்தைச் சேர்ந்தவர் புரந்தர் மஹ்டோ. இவர் கடந்த ஜூன் 25-ம் திகதி அன்று தனது மகள் சோனிகா குமாரி மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவருடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது திடீரெனெ இவரது வீட்டிற்குள் ஆண் புலி ஒன்று நுழைந்துள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக புலி அவர்கள் தூங்கிய அறைக்குள் நுழையாமல் வேறுபக்கமாக சென்றுள்ளது.

ஆகஸ்ட் 15க்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லும் விமானங்கள் விலை அதிகரிப்பு.., என்ன காரணம்?
இதனால் அவர் தனது மகள் மற்றும் சிறுமியை பத்திரமாக வெளியில் அழைத்து வந்துள்ளார். பின்னர் புலியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டார்.
அதன்பிறகு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் மீட்பு படையினர் வந்து 12 மணி நேரம் போராடி புலியை பிடித்து சென்றனர்.
இதில், புத்திசாலித்தனமாக புலியை பிடித்துக் கொடுத்த தந்தை-மகளுக்கு வீரதீர விருது வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற 76-வது ஆண்டு வனவிழா கொண்டாடட்டத்தில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும், மாநில அரசு சார்பில் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள காசோலையும், வனத்துறை சார்பில் தனியாக ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு காசோலையும் வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |