குழந்தையின் கண் முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: வழக்கில் முக்கிய திருப்பம்
அமெரிக்காவின் ப்ளோரிடாவில், இரண்டு வயது குழந்தையின் கண் முன்னே அதன் தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக, கொல்லப்பட்டவரின் முன்னாள் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட நபர்
2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், தன் இரட்டைக் குழந்தைகளை தன் முன்னாள் மனைவியான Shanna Gardner-Fernandez (35) வீட்டில் விட்டுவிட்டு, தனது இன்னொரு மகளான Bexley (2)உடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் Jared Bridegan (33).
அப்போது, சாலையின் நடுவே டயர் ஒன்று கிடப்பதைக் கவனித்த Jared, காரிலிருந்து இறங்கி அந்த டயரை அப்புறப்படுத்தும்போது, மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றுள்ளார்.
Credit: Instagram/justiceforjaredb
தந்தை கொல்லப்படுவதைப் பார்த்து நடுநடுங்கிப்போயிருந்த Bexleyயை வழிப்போக்கர் ஒருவர் கவனித்து மீட்டுள்ளார்.
வரிசையாக கைது செய்யப்பட்ட நபர்கள்
பொலிசாரின் தீவிர விசாரணையில், Jaredஐ சுட்டுகொன்றது Henry Tenon (61) என்னும் நபர் என்பது தெரியவந்தது. Henryயைக் கைது செய்த பொலிசார் அவரது போன் ரெக்கார்டுகளை ஆராய்ந்தபோது, அவர் Mario Fernandez Saldana என்னும் நபருடன், Jaredஇன் கொலைக்கும் முன்னும் பின்னும் 70 முறை பேசியது தெரியவரவே, பொலிசார் Marioவை விசாரிக்க, அவருக்கு Jaredஇன் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் Jaredஐக் கொல்வதற்காக Henryக்கு மூன்று காசோலைகள் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
Credit: Jacksonville Police Department
இந்த Henry, Marioவுக்குசொந்தமான வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு வசித்து வருபவர் ஆவார். அதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த Marioதான் Shannaவின் இந்நாள் கணவர்.
வழக்கில் முக்கிய திருப்பம்
ஆக, Jaredஐக் கொலை செய்வதற்காக அவரது முன்னாள் மனைவியான Shannaவும், Shannaவின் இந்நாள் கணவரான Marioவும் திட்டம் தீட்டுள்ளனர்.
Mario, தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் Henryக்கு பணம் கொடுத்து Jaredஐக் கொலை செய்யவைத்துள்ளார்.
Credit: Facebook/BeachBaked904
இந்த விடயங்களை ரகசியமாக வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவந்தநிலையில், Jared கொல்லப்பட்டபின் வீடு மாற்றி, தான் வாழ்ந்து வந்த ப்ளோரிடாவிலிருந்து, 2,800 மைல் தொலைவிலுள்ள வாஷிங்டனுக்கு குடிபெயர்ந்துவிட்டார் Shanna.
Credit: GoFundMe
நேற்று, வாஷிங்டனில் Shannaவை பொலிசார் கைது செய்துள்ளனர். Jared, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவாக பணி செய்துவந்தவர் என்பதும், கணவனுக்கும் மனைவிக்கும், தங்கள் இரட்டைக் குழந்தைகளை யார் வளர்ப்பது என்பது தொடர்பில் பிரச்சினை இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.
Credit: Facebook
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |