தொழிற்சாலை ஊழியரின் மகன்... துணிந்து உருவாக்கிய நிறுவனம்: இன்று பால ஆயிரம் கோடி சொத்து மதிப்பு
இன்றைய காலகட்டத்தில் கோடீஸ்வரர்கள் சிலர் மேட்டுகுடி மக்களை கவரும் முயற்சிகள் மூலம் புகழ் பெறுகிறார்கள், மற்றவர்கள் சாதாரணமாக தொடங்கி சவால்கள் பலவற்றை எதிர்கொண்டு சாம்ராஜியங்களை உருவாக்குகிறார்கள்.
அறிந்திருக்கவே வாய்ப்பில்லை
அப்படியான ஒருவர் தான் Colin Huang. சீனாவுக்கு வெளியே இவரை எவரும் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னர் பணியாற்றியுள்ள கொலின் ஹுவாங்கின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 48.6 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறுகின்றனர்.
சீனாவின் Zhejiang மாகாணத்தில் 1980ல் பிறந்த ஹுவாங்கின் பெற்றோர் சாதாரண தொழிற்சாலை ஊழியர்கள் தான். இதனால் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகள் குறித்து சிறு வயதிலேயே அவருக்கு எடுத்துக்கூறப்பட்டது.
கல்வியில் தனது திறமையை வெளிப்படுத்திய ஹுவாங், எந்த சிபாரிசும் இல்லாமல் Zhejiang பல்கலைக்கழகத்தில் இணைந்தார். பின்னர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார். தொடர்ந்து கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் பயிற்சி பெற்றார்.
ஆனால் 2015ல் ஹுவாங் மிகவும் திணிச்சலான முடிவு ஒன்றை எடுத்தார். Pinduoduo என்ற இணைய வழி வணிக வலைத்தளம் ஒன்றை உருவாக்கினார். அவரது துணிவுக்கு பிரதிபலனாக, Pinduoduo நிறுவனம் சீன மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெரும் நன்கொடையாளராக
2018ல் சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை திரட்டியது. 2022ல் சர்வதேச சந்தை மீது கவனம் செலுத்திய ஹுவாங், அமெரிக்காவில் Temu என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அதுவும் அங்குள்ள மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது.
2024ல் சீனாவின் போத்தல் குடிநீர் மன்னர் என அறியப்படும் Zhong Shanshan என்பவரை விடவும் கோடீஸ்வரராக உருவானார். 2020ல் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகியிருந்தாலும், தற்போதும் செல்வாக்கு மிகுந்த சீன தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
மட்டுமின்றி, பெரும் நன்கொடையாளராகவும் திகழ்கிறார். சீனாவில் சராசரியாக மாதம் 750 மில்லியன் மக்கள் Pinduoduo நிறுவனத்தை பயன்படுத்துகின்றனர் என்பதுடன் சாதனை வருவாயும் ஈட்டி வருகிறது.
வெறும் 44 வயது ஹுவாங்கின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 4,860 கோடி அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |