9ம் வகுப்பு மாணவனுக்கு பரிசாக தந்தை கொடுத்த BMW கார்
Father Gift BMW Car 14 Years old Son: மேற்கு வங்க மாநிலத்தினைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 14 வயது மகனுக்கு BMW கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.
மகன் கேட்ட பரிசு
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஆசையாக கேட்கும் சின்ன சின்ன பொருட்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
பள்ளி படிக்கும் குழந்தைகள் கேட்கும் பெரும்பாலான பொருட்கள் அவர்களின் படிப்பிற்கு தேவைப்படும் பொருட்களை ஆசையாக கேட்டு அதனை பரிசாக பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் இங்கு தந்தை ஒருவர் மகனின் ஆசைக்கு எந்தவொரு தடையும் சொல்லாமல் கார் ஒன்றினை வாங்கி பரிசாக அளித்துள்ளார்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கல்சா பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் பள்ளிக்கூடம் படிக்கும் தனது மகனுக்கு கார் ஒன்றினை பரிசரித்துள்ளார்.
கல்சா பகுதியையடுத்து பராஜ் கிராமத்தில் ஷம்சுதீன் மித்யா என்பவரின் மகன் முகமது கல்ஹா என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ள நிலையில், நீண்ட காலமாக BMW M4 என்ற காரை வாங்க வேண்டும் என்று ஆசையாக இருந்துள்ளான்.
காரை பரிசளித்த தந்தை
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால், நீ ஆசைப்பட்ட BMW M4 காரை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தேர்விலும் மாணவன் சிறந்த மதிப்பெண் எடுத்துள்ளான். இதனால் தந்தை தனது மகன் ஆசைப்பட்ட காரை வாங்க கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

இதற்காக மேற்கு வங்கத்திலிருந்து மும்பைக்கு வந்து குறித்த காரை வாங்கியதுடன், இந்த காரை மும்பையிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள தனது கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு சரக்கு லாரி ஒன்றினையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்பு குறித்த காரை நவம்பர் 6ம் தேதி தனது மகனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை அவதானித்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு விலை உயர்ந்த காரை பதினாறு வயது சிறுவனுக்கு பரிசளிப்பது சரியானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் பல இடங்களில் மாணவர்கள் கார்களை பொறுப்பின் இயக்கி, சாலை விபத்தினை ஏற்படுத்தி வருவதாகவும், வாகனம் இயக்குவதற்கு என குறிப்பிடப்பட்டுள்ள வயதை பூர்த்தி செய்ய வேண்டிய விதிகள் இருப்பதால் இவர் எப்படி காரை இயக்குவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |