பாம்புகளின் DNA! குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்து சென்று தந்தை செய்த கொடூர செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்
அமெரிக்காவில் குழந்தைகளின் உடலில் பாம்புகளின் DNA கலந்து உள்ளதால் இரண்டு குழந்தைகளை கொடூரமாக சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் மேத்யூ டெய்லர் கோல்மேன்(40). இவருக்கு illuminity போன்ற பழங்கால கதைகளில் பெரிதும் ஈடுபாடு உள்ளதால் மூடநம்பிக்கைகளை நம்புவதாக கூறப்படுகிறது.
அதுவும் கேனான் என்ற சாத்தானை தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மேத்யூ தனது மனைவியிடம் இரண்டு குழந்தைகளின் உடலில் பாம்பு DNA கலந்து உள்ளதால் பின் வரும் காலத்தில் அவர்கள் அசுரராக மாறி உலகத்தையே அழித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மேத்யூ தனது மனைவியிடம் மெக்சிக்கோவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி 2 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் இதை நம்பாத மேத்யூவின் மனைவி FBIயை தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார். மேத்யூ டெய்லர் கோல்மேனின் செல்போன் வாயிலாக அவரை கண்டுபிடித்து பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து FBI மேத்யூவிடம் விசாரித்தபோது, தனது 2வயது மற்றும் 10 மாத குழந்தைகளின் உடலில் பாம்புகளின் DNA கலந்து உள்ளதால் அவர்களை சுட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மூடநம்பிக்கைகளை நம்பி 2 பச்சிளங் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.