சூனியம் இருப்பதாக டிரம்மை புதைத்த நபர்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Tamil nadu Chennai
By Raju May 22, 2022 11:30 AM GMT
Report

சென்னையில் சொத்து தகராறில் நபர் ஒருவர், தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன்(80). இவருக்கு குணசேகரன்(47) என்ற மகனும், காஞ்சன மாலா, யமுனா, பரிமளா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

குமரேசன் தனது வீட்டின் மேல் தளத்திலும், அவரது மகன் குணசேகரன் தனது குடும்பத்தினருடன் கீழ்த்தளத்தில் வசித்து வந்தனர். கணவர் இறந்துவிட்டதால் காஞ்சன மாலா தனது தந்தையுடன் அவருக்கு உதவியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி மாமியார் வீட்டிற்கு சென்று திரும்பிய காஞ்சன மாலா வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீடு பூட்டியிருந்ததுடன் வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த காஞ்சன மாலா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக சிசிடிவி கெமராவை ஆய்வு செய்தபோது, குணசேகரன் மேல்தளத்தில் இருந்து ஒரு டிரம்மை கீழே கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

சூனியம் இருப்பதாக டிரம்மை புதைத்த நபர்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Father Killed Buried In Drum By Son In Chennai

அதனைத் தொடர்ந்து தனிப்படை ஒன்றை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார், குணசேகரனின் மனைவியிடம் விசாரித்தபோது அவரது கணவர் வெங்கடேசன் என்பவரை பார்க்க காவேரிப்பாக்கம் சென்றதாக தெரிவித்தார்.

உடனே காவேரிப்பாக்கம் சென்ற பொலிசார், வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் டிரம்முடன் வந்த குணசேகரன் அதனை நிலத்தில் புதைக்க வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், டிரம்மில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாகவும், மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் அதனை டிரம்மில் அடைத்து விட்டதாகவும் குணசேகரன் கூறியுள்ளார்.

மந்திரவாதி அந்த டிரம்மை நிலத்தில் புதைக்க வேண்டும் என்று கூறியதால் இங்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய வெங்கடேசன் நபர் ஒருவரை துணைக்கு அழைத்து, அந்த டிரம்மை பள்ளம் தோண்டி நிலத்தில் புதைக்க உதவியுள்ளார்.

பின்னர் வெங்கடேசனை அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட டிரம்மை பொலிசார் தோண்டு எடுத்தனர். அதனுள் குமரேசனின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது.

சூனியம் இருப்பதாக டிரம்மை புதைத்த நபர்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Father Killed Buried In Drum By Son In Chennai

குமரேசன் தனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து மாதந்தோறும் வரும் இரண்டரை லட்சம் ரூபாயை பணத்தை, அவரது மூன்று மகள்களுக்கும் பிரித்து கொடுத்து வந்துள்ளார். மேலும் தனது ஓய்வூதிய பணத்தையும் அவர்களுக்கு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி குமரேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில், குமரேசனை அடித்துக் கொன்ற குணசேகரன், அவரது உடலை மறைக்க இவ்வாறு டிரம்மில் அடைத்து புதைத்து விசாரணையில் தெரிய வந்தது.

தலைமறைவான குணசேகரனை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூனியம் இருப்பதாக டிரம்மை புதைத்த நபர்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Father Killed Buried In Drum By Son In Chennai

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US