அமெரிக்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய இளம்பெண்: புதிய தகவல்
இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது தந்தை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமான நிலையில், அர்ஜூன் ஷர்மா என்னும் நபர், ஜனவரி மாதம் 2ஆம் திகதி, நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.

- X@swaasthi)
நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.
அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், நிகிதாவைக் காணவில்லை என புகாரளித்த அர்ஜூன் தலைமறைவாகிவிட்டார்.
அர்ஜூன் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என நம்பும் அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளார்கள்.
தந்தை தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், நிகிதாவின் தந்தையான ஆனந்த் (Anand Godishala), ஊடகங்கள் குறிப்பிடுவது போல, அர்ஜூன் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்று கூறியுள்ளார்.

அர்ஜூனும் வேறு இரண்டுபேரும், நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஆனந்த், அர்ஜூன் தன் மகளுடைய அறையில் தங்கியிருந்தவர் மட்டுமே என்றும், அவர் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அர்ஜூன் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தது குறித்தும், அவர் இந்தியாவுக்குத் திரும்ப திட்டமிட்டுவந்தது குறித்தும் தன் மகளான நிகிதா சமீபத்தில் அறிந்துகொண்டதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |