கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: தந்தை வெளியிட்டுள்ள செய்தி
கனடாவில் கல்வி கற்றுவந்த இந்திய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது தந்தை சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான விதி (Vidhi Kalpeshbhai Meghani, 22) என்னும் இளம்பெண், நான்கு ஆண்டுகளாக கனடாவில் கல்வி பயின்றுவந்துள்ளார்.
இந்நிலையில், கனடாவின் நயாகரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் விதியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

இந்த துயர சம்பவம், இம்மாதம், அதாவது, மே மாதம் 15ஆம் திகதி நிகழ்ந்த நிலையில், மகள் கொல்லப்பட்ட விடயம் குறித்து அவரது பெற்றோருக்குத் தெரியாமலே இருந்துள்ளது.
படித்துக்கொண்டே பகுதி நேர வேலையும் பார்த்துவந்ததால் மகள் பிஸியாக இருக்கக்கூடும் என அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு கனடாவிலிருந்து பொலிசார் அழைத்தபிறகுதான் அவர்களுக்கு தங்கள் மகள் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
தந்தை வெளியிட்டுள்ள செய்தி
இந்நிலையில், விதியின் தந்தை சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் கல்வி கற்றுவந்த தனது மகளிடம், போதை கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தன் மகள் பணம் கொடுக்க மறுத்ததுடன் அந்த நபரை எதிர்த்துப் போராடியதாகவும், அந்த நபர் தன் மகளைக் கத்தியால் குத்திவிட்டதாகவும், தன் மகள் உயிரிழந்துவிட்டதாகவும் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் விதியின் தந்தை.
Anand, Gujarat: On the murder of an Indian student in Canada, her father says, “My daughter’s name is Vidhi Kalpesh Megha. She had been there for four years. I came to know about it yesterday from the local police station. I was informed that she had died. I sent an official… pic.twitter.com/RfZre0o0sc
— IANS (@ians_india) May 28, 2026
அத்துடன், தன் மகளுடைய உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்புமாறும் அவர் கனடா அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், விதியைக் கொலை செய்த ஜோஷுவா (Joshua St Omer, 40) என்னும் நபரை இம்மாதம், அதாவது, மே மாதம் 18ஆம் திகதி கைது செய்துள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |