சொந்தமாக விமான சேவை வைத்திருந்த தந்தை... மோடியுடன் நெருக்கம்: யாரிந்த லைலா
கடன் நெருக்கடியால் நாட்டைவிட்டு வெளியேறிய விஜய் மல்லையா கடந்த காலங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
முதல் மனைவி சமீராவிடம்
இருப்பினும், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா மல்லையா பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் மல்லையாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள். லியானா மல்லையா, தன்யா மல்லையா மற்றும் லைலா மல்லையா.
இதில் லைலா என்பவர் விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள், பின்னர் முறையாக தத்தெடுத்துக்கொண்டார். விஜய் மல்லையா தமது முதல் மனைவி சமீராவிடம் இருந்து பிரிந்த பின்னர், பெங்களூருவில் தமது அண்டை வீட்டில் குடியிருந்த ரேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த ரேகா முன்பு ஷாஹித் மஹ்மூத் என்பவரை திருமணம் செய்து கொண்டு, இந்த தம்பதிக்கு லைலா மற்றும் கபீர் மஹ்மூத் என இரு பிள்ளைகள் இருந்தனர். இதில், ரேகாவை திருமணம் செய்துகொண்டதை அடுத்து, லைலாவை விஜய் மல்லையா முறைப்படி தத்தெடுத்துக்கொண்டார்.
நகை வடிவமைப்பாளரான லைலா
லைலா மல்லையா பின்னர் முதலீட்டு வங்கியாளரான சமர் சிங் என்பவரை மணந்தார். பெங்களூரில் உள்ள அதிதி சர்வதேசப் பள்ளியில் தனது கல்வியை முடித்த லைலா, அதன் பின்னர் வால்தாமில் உள்ள பென்ட்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
பின்னர் நியூயார்க் நகரில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்தார். நகை வடிவமைப்பாளரான லைலா, பெங்களூரில் உள்ள கஹாவா என்றழைக்கப்படும் லைஃப்ஸ்டைல் ஸ்டோரில் தனது டிசைன்களை விற்பனை செய்தார்.
ஆனால் அவர் முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியுடன் பணிபுரிந்த போது ஐபிஎல் விவாதத்தில் லைலாவின் பெயரும் பிரபலமானது.
விஜய் மல்லையா கடனாளியாக இந்தியாவில் இருந்து வெளியேறும் வரையில், அவருக்கு சொந்தமாக விமான சேவை நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |