பிரித்தானியாவில் சொட்டு மருந்துக்கு பதிலாக பசையை மகனின் கண்ணில் விட்ட தந்தை! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இங்கிலாந்தில் 9 வயது மகனின் கண்ணில் சொட்டு மருந்துக்கு பதிலாக பசையை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஹாரோகேட் என்ற பகுதியில் வசித்து வருபவர் கெவின் டேயின். இவரது மகன் ரூபர்ட். சில நாட்களாக ரூபர்ட் கண் அரிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனை அடிப்படையில் அவருக்கு சில சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் ரூபர்ட் அந்த சொட்டு மருந்துகளை தவறாமல் எடுத்து வந்துள்ளார். 3வது நாள் ரூப்பர்ட்டின் தந்தை சொட்டு மருந்து என்று நினைத்து பசையை தனது மகனின் கண்ணில் விட்டுள்ளார்.
ஒரு சில துளிகள் கண்ணில் விழுந்த பின்னரே அது பசை என்பதை உணர்ந்தார். இதனால் ரூபர்ட்டால் தனது கண்களை 4 நாட்கள் கடந்தும் திறக்க முடியாத நிலையில் அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் ரூபர்ட்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு 4 நாட்களுக்கு பிறகே அவரால் கண்களை திறக்க முடிந்தது.
பசையால் அவரது கண்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக ரூபர்ட்டுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.