ஐபிஎல் தொடரில் முதல்முறை; எதிரெதிர் அணியில் தந்தை - மகன்
19வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் புதுவிதமான சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 5 Wide, 1 No-Ball உட்பட 11 பந்துகள் வீசி, ஐபிஎல் தொடரின் நீளமான ஓவர் என்ற மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார்.
இதே போல், முதல்முறையாக தந்தை மகன் எதிரெதிர் அணியில் உள்ள சம்பவம் ஐபிஎல் தொடரில் நடைபெற உள்ளது.
எதிரெதிர் அணியில் தந்தை - மகன்
கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வழிகாட்டியாக(mentor) செயல்பட்டு வருகிறார்.

அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர், முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி.வந்தார். நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் டிரேடிங் மூலம் வாங்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் மே 4 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழிகாட்ட, அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பந்து வீச உள்ளார்.
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக எதிரெதிர் அணியில் தந்தை மகன் உள்ள நிகழ்வு இடம்பெற உள்ளது.

ஆனால், LSG அணியில் ஏராளமான பந்து வீச்சாளர்கள் உள்ளதால் ஆடும் லெவன் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர் 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் நபி மற்றும் அவரது மகன் ஹசன் ஐசக்கில் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் நோவாக்கலி எக்ஸ்பிரஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |