சாண எரிவாயு தொட்டிக்குள் இறங்கிய தந்தை..காப்பற்ற சென்ற மகன்..ஒருவர் பின் ஒருவராக நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் சாண எரிவாயு தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் கால எரிவாயு தொட்டி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பாராமதி பகுதியைச் சேர்ந்தவர் பானுதாஸ் அதாலே. இவரது வீட்டின் அருகே ஆங்கிலேயர் காலத்தின் பழமையான சாண எரிவாயு தொட்டி உள்ளது.
இதில் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி, அதன் மூலம் சமையல் எரிவாயு பெற்று வந்தனர். இந்த நிலையில், தொட்டியில் இருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், அதனை சரி செய்ய பானுதாஸ் உள்ளே இறங்கியுள்ளார்.
@PTI
காப்பாற்ற சென்ற மகன்
ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால், அவரது மகன் பிரவின் உள்ளே சென்றுள்ளார். அவரும் வெளியே வரவில்லை. இதனால் பதறிப் போன பிரகாஷ், பாபாசாகேப் ஆகிய நபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
நான்கு பேரும் வெளியே வரவில்லை என்பதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
@ANI (Twitter)
பரிதாப பலி
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர், தொட்டிக்குள் மயங்கிய நிலையில் இருந்த பானுதாஸ் உட்பட நான்கு பேரையும் வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் அனைவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Representational
தந்தை, மகன் உட்பட நான்கு பேர் எரிவாயு தொட்டிக்குள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.