கனடாவில் வாழும் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை: வைரலாகும் வீடியோ
கனடாவில் வாழும் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற தந்தையும், அவரது மகளும் சந்தித்துக்கொள்ளும் நெகிழவைக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
மகளைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற தந்தை
Shrutva Desai என்ற இளம்பெண் கனடாவில் கல்வி கற்று வருகிறார். விரைவில் அவர் பட்டம் பெற உள்ள நிலையில், மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவிலிருந்து கனடா வந்துள்ளார் Shrutvaவின் தந்தை.
Shrutva, கடை ஒன்றில் பகுதி நேரப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவரது தந்தை Shrutvaவின் கண் முன்னே வந்து நிற்க, அப்பாவைப் பார்த்த சந்தோஷத்திலும் அதிர்ச்சியிலும் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்கிறார் Shrutva.
அப்பா மகளைத் தூக்கி எடுக்க, அப்பாவைக் கட்டிக்கொண்ட Shrutva நீண்ட நேரம் அவரை விடாமல் அழுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
வைரலாகிவரும் வீடியோ
சமூக ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோ 1.6 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளதுடன், 198,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.
பெற்றோரைப் பிரிந்து தனியாக வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள், பிள்ளைகளை தொலைதூர நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் நினைவால் வாடும் பெற்றோர் என பலதரப்பினரும் அந்த வீடியோவைக் கண்டு நெகிழ்ந்துபோயிருக்கிறார்கள்.
பிள்ளைகளைப் பிரியும் நிலை எந்த தந்தைக்குமே வரக்கூடாது என்று ஒருவர் கூற, மற்றொருவரோ, தன்னை அந்த தந்தையாகவும், அந்தப் பெண்ணை தன் மகளாகவும் கற்பனை செய்துகொண்டதாகவும், தன்னால் கண்ணீரை அடக்கமுடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |