தந்தையின் சிறிய மசாலா விற்பனை கடையை பல கோடிகள் மதிப்பிலான நிறுவனமாக மாற்றிய மகன்
ராஜஸ்தான் மாநிலத்தவரான Bhawarlalji Pagariya 1960களில் கர்நாடகாவின் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து, பிழைப்புக்காக மசாலா விற்பனை கடை ஒன்றை தொடங்கினார்.
தொழில் வளர்ச்சி அடையும்
குறித்த கடையை அவர் தொடர்ந்து 30 ஆண்டுகளாக நிர்வகித்தும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் மசாலா பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுவதைவிட தயாரிப்பிலும் களமிறங்கினால் தொழில் வளர்ச்சி அடையும் என அவரது மகன் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்ட Naresh Pagariya, மசாலா பொருட்களின் தயாரிப்பு தொழிலை முன்னெடுத்துள்ளார். 1998ல் தந்தை நடத்தி வந்த அந்த சிறிய கடையில் இருந்து, 300 சதுர அடி கொண்ட வசதியான கடைக்கு மாறியுள்ளார்.
தமது நிறுவனத்திற்கு Pagariya Foods என பெயர் வைத்ததுடன், தயாரிக்கும் பொருட்களுக்கு Kwality Foods என பெயர் சூட்டியுள்ளார். புதிதாக 8 வகை தயாரிப்புகளையும் அறிமுகம் செய்ததுடன், பெங்களூருவுக்கு வெளியே விற்பனையை விரிவுப்படுத்தியுள்ளார்.
சகோதரர்கள் இருவர் உருவாக்கிய ரூ 30,000 கோடி நிறுவனம்... நாளுக்கு ரூ 53 லட்சம் வருவாய்: அவர்களின் சம்பளம்?
மசாலா பொருட்கள் விற்பனையில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில், 2002ல் cereals விற்பனையை துவங்கியது Pagariya Foods நிறுவனம். அது உடனடியாக மக்கள் ஆதரவை பெற, தென்னிந்தியா முழுவதும் மிக வேகமாக வியாபாரத்தை பெருக்கினார்கள்.
5,000 கடைகளில்
அத்துடன் தற்போது தென்னிந்தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளனர். மேலும், மேற்கு இந்தியாவில் 35,000 உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் இவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
மட்டுமின்றி, Dmart, Big Bazaar, Reliance, More, Walmart உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் வணிக வளாகங்களிலும் Kwality Foods தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Amazon India, Flipkart, மற்றும் Bigbasket ஆகிய நிறுவனங்களில் இணையமூடாகவும் விற்பனை செய்யப்படுகிறது. Kwality Foods தயாரிப்புகள் சுமார் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் 5,000 கடைகளில் Kwality Foods தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2019ல் Kwality Foods தயாரிப்புகளின் விற்பனை வருவாய் என்பது இந்திய மதிப்பில் ரூ 50 கோடி என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |