15 பந்துகளில் அரைசதம்! இமாலய சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன்
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் ஃபாத்திமா சனா 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
ஃபாத்திமா சனா
பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கராச்சியில் நடந்தது.
முதலில் பாகிஸ்தான் அணி 223 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஃபாத்திமா சனா 19 பந்துகளில் 62 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்), சைரா ஜபீன் 32 பந்துகளில் 50 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.1 ஓவர்களில் 90 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிவேகமாக அரைசதம்
அத்துடன் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. சாதியா 3 விக்கெட்டுகளும், நஷ்ரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் ஃபாத்திமா சனா 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் டி20யில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு சோஃபி டிவைன், போப் லிட்ச்ஃபீல்ட், ரிச்சா கோஷ் ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |