தந்தை இறந்து 3 நாளில்..நாட்டிற்காக விளையாட வந்த பாத்திமா சனா - கூறிய விடயம்
மகளிர் பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
நாடு திரும்பிய சனா
ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாத்திமா சனா மீண்டும் செயல்படுகிறார். தனது தந்தையின் இறப்பினால் நாடு திரும்பிய பாத்திமா சனா (Fatima Sana) இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் உலகக்கிண்ணத் தொடரில் கடைசி போட்டியில் விளையாட அவர் அணியில் இணைந்துள்ளார்.
இளம் கேப்டன்
போட்டி குறித்து பேசிய சனா, "ரன் ரேட்டை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் விளையாடுவோம்" என்றார்.
22 வயதேயான பாத்திமா சனா பாகிஸ்தானின் இளம் கேப்டன் எனும் பெருமையுடன் பொறுப்பேற்றார்.
நடப்பு தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் 43 ஓட்டங்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அத்துடன் இலங்கை அணியை வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்த அவர் Player of the match விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |