சனாவின் சரவெடி ஆட்டம்: வங்காளதேசத்தை வீழ்த்தி வெள்ளி வென்ற பாகிஸ்தான்
Pakistan women team won bronze asia games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான ஆசியப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
மகளிர் ஆசியக் கிண்ண வெள்ளிப் பதக்கத்திற்கான போட்டியில், பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
சனா சரவெடி ஆட்டம்
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி நிஸ்ஷினில் நடந்தது.
வெள்ளிப் பதக்கத்திற்கான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீராங்கனைகள் ஷாவால் 17 ஓட்டங்களும், குல் ஃபெரோஸா 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த சைரா (5), ஆயிஷா (9), எய்மான் (0) சொதப்ப ஆலியா ரியாஸ் 25 ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் ஃபாத்திமா சனா (Fatima Sana) 30 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் விளாச, பாகிஸ்தான் அணி 145 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் வெற்றி
நஹிதா அக்தர், ஷொர்ணா அக்தர் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளும், ஷன்ஜிதா அக்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்களே எடுத்ததால், பாகிஸ்தான் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஷார்மின் அக்தர் 46 ஓட்டங்களும், நிகர் சுல்தானா 25 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தானின் உம்-இ-ஹனி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
