கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதை எச்சரிக்கும் முக அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
Fatty liver symptoms on face- கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படும் ஒரு நிலை.
உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
ஆரம்ப கட்டங்களில் கண்டறிந்தால், உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மாற்றங்கள் மூலம் இதை குணப்படுத்த முடியும்.

கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்பத்தில் பெரும்பாலும் அறிகுறிகள் எதையும் காட்டுவதில்லை.
இருப்பினும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அந்தவகையில், கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான முக அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1. முக வீக்கம்
கல்லீரல் சரியாக செயல்படாதபோது, உடலில் திரவ சமநிலை பாதிக்கப்படும். இதனால் கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி முக வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து முக வீக்கம் இருந்தால், மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
2. கழுத்தில் கருமை
கழுத்துப் பகுதியில் திடீரென கருமையான படலம் தோன்றுவது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையதாக இருக்கும். இது சில கல்லீரல் பிரச்சனைகளுடனும் தொடர்புடையது.
எனவே கழுத்தில் ஏற்படும் திடீர் கருமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.
3. முகம் சிவந்து போதல்
சில நாள்பட்ட கல்லீரல் பிரச்சனைகளால் முகம் சிவந்து காணப்படும். ரோசாசியா போன்ற சிறிய தடிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
முக வீக்கம், கழுத்தில் கருமை உள்ளிட்ட மற்ற அறிகுறிகளும் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |