பிரான்சில் அறிமுகம் செய்யப்படும் நுகர்வோருக்கு சாதகமான விதி
பிரான்ஸ் அரசு, நுகர்வோருக்கு சாதகமான விதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
Shrinkflation
Shrinkflation என்பது என்னவென்றால், கடையில் அல்லது பல்பொருள் அங்காடியில் வழக்கமாக விற்கப்படும் ஒரு பொருளின் அளவு குறைக்கப்பட்ட பின்னரும், அதன் விலை குறைக்கப்படாமல் அப்படியே இருக்குமானால், வேறு வகையில் கூறினால், 5.6 யூரோக்கள் விலை கொண்ட ஒரு பாக்கெட்டில், வழக்கமாக 50 மிட்டாய்கள் இருக்கும் நிலையில், அந்த மிட்டாய்களை திடீரென 40 ஆக குறைத்துவிட்டு விலையை மட்டும் அதே 5.6 யூரோக்களாக விற்பது என்று வைத்துக்கொள்ளலாம்.
பிரான்சில், இனி அப்படி விலையை அப்படியே வைத்துவிட்டு பொருளின் அளவைக் குறைக்கும் பட்சத்தில், கடைக்காரர்கள் நுகர்வோரிடம் அது குறித்து சொல்லவேண்டும் என புதிய விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜூலை மாதம் 1ஆம் திகதி, இந்த விதி அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சரான Bruno Le Maire தெரிவித்துள்ளார்.
மொத்தமாக வாங்கப்படும் பொருட்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருட்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என பிரான்ஸ் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் ஆதரவு அமைப்புகள் இந்த விதியை வரவேற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |