மீண்டும் களமிறங்கும் ரசிகர்களுக்கு விருப்பமான இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள்! ஒரு அழகிய புகைப்படம்
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் இந்தியா வந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் உள்ள ஷாகித் வீர் நாராயன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இந்த கிரிக்கெட் தொடர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைத் தனிநபர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.
வரும் மார்ச் 5ம் திகதி துவங்கும் இந்த தொடரின் இறுதி போட்டி வரும் மார்ச் 21 ஆம் திகதி நடக்கவுள்ளது.
Time to move @RSWorldSeries Looking forward to it .. at Sydney Airport pic.twitter.com/G1dlwMvNfM
— Russel Arnold (@RusselArnold69) March 1, 2021
இதில் இலங்கை ஜாம்பவான்கள் அணியில் திலகரத்னே தில்ஷன், சனத் ஜெயசூர்யா , பர்வேஸ் முஷரப், ரங்கனா ஹெராத், திலன் துஷாரா, அஜந்தா மெண்டிஸ், சமாரா கபுகேந்திரா, உபுல் தரங்கா, சமாரா சில்வா, சிந்தகா ஜெயசிங்கே, தாமிகா பிரசாத், நுவன் குலசேகரா, ரசல் அர்னால்டு, துலஞ்சனா, மலிண்டா வாரான்புரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்போட்டியை எதிர்பார்ப்பதாக ரசல் அர்னால்ட் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
இதோடு தில்ஷனுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
ஒரு சமயத்தில் இலங்கை சர்வதேச அணிக்காக கெத்து காட்டிய வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.