களத்தில் இலங்கை வீரர்களின் தோள் மீது கைபோட்டு பேசிய பாகிஸ்தான் வீரர்: நட்புறவை வெளிப்படுத்திய வீடியோ
காலே மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் ஃபாவத் ஆலம் இலங்கை வீரர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடிய வீடியோவை இலங்கை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் ஃபாவத் ஆலம், ராஃப் ஆகியோர் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் திக்வெல்லவுடன் மைதானத்தில் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.
ஃபாவத் ஆலம் விக்கெட் கீப்பர் திக்வெல்ல தோள் மீது கைபோட்டு உரிமையுடன் நட்பாக உரையாடினார். இலங்கை கேப்டனும் அவரது பேச்சை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்.
A fun chat between @NiroshanDikka, @IamDimuth , @iamfawadalam25 and @HarisRauf14 before the play.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 26, 2022
Any idea what are they talking about?#SLvPAK pic.twitter.com/t41dzeJ10w
பரபரப்பான கட்டத்தில் காலே டெஸ்ட் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் எந்த வித போட்டி, பொறாமையும் இன்றி நட்பாக உரையாடிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை இலங்கை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.