சைபர் எச்சரிக்கை விடுத்த FBI: உலகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்களில் ஊடுருவ ஹேக்கர்கள் முயற்சி
FBI issues global cyber threat warning: FBI உலகளாவிய இணைய அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வங்கிச் செயலிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் உள் தகவல் தொடர்பு வலையமைப்பு ஆகியவற்றைப் முடக்கிய தொடர்ச்சியான சேவைத் தடங்கல்கள் மற்றும் சைபர் தாக்குதல்களால் அமெரிக்கா பதற்றமான நிலையில் உள்ளது.
FBI கடும் எச்சரிக்கை
சைபர் குற்றவாளிகளும் அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்களும், 'Artex AI'-ஐப் பயன்படுத்தி மூன்று மணி நேரத்திற்குள் உலகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்களில் ஊடுருவ இருக்கிறார்கள் என்று FBI கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The #FBI issued a FLASH advisory warning that cybercriminals and state-aligned hackers are exploiting ARTEX, a super intelligence-powered penetration testing framework, to automate attacks against businesses and organizations worldwide. ARTEX can accelerate intrusions from initial targeting to privileged access in under three hours. It was used in the October ConnectWise supply-chain compromise, which exposed Microsoft 365 customer environments and involved attempted authentication against more than 2,250 downstream tenants. The FBI is urging businesses and organizations to strengthen access controls, monitor suspicious automated activity, and report potential compromises to https://t.co/Y65F8KJfqo. Read more here: https://t.co/Cl5lpZ7cgG
— FBI Dallas (@FBIDallas) November 17, 2026
பயனர்களின் பணம் மற்றும் கடன் அட்டை விவரங்களைக் குறிவைத்து, உலகின் 178 மிகப்பெரிய நிறுவனங்களில் ஹேக்கர்கள் நடத்திய மாபெரும் சைபர் தாக்குதலின் மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் திங்கள்கிழமை அன்று வங்கிச் சேவைகளில் ஏற்பட்ட பரவலான முடக்கத்தால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களால் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் போனது.
இன்று, ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், நாடு தழுவிய அவசரநிலை எச்சரிக்கை சோதனைக்குத் தயாராக இருக்குமாறு ஃபெடரல் அதிகாரிகள் அமெரிக்க மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், செவ்வாயன்று அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது, மேலும் கிழக்கு நேரப்படி காலை 9.40 மணி நிலவரப்படி, டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 332 புள்ளிகள் அல்லது 0.6 சதவீதம் சரிந்திருந்தது.