கைப்பற்றப்பட்ட 10 பெட்டி ஆதாரங்கள்: சிக்கலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ வீட்டில் நடந்த சோதனையில் 10 பெட்டிகள் அடங்கிய ஆதாரங்களை FBI அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடாவில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் Mar-a-Lago கிளப் வீட்டில் FBI அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 பெட்டிகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சோதனை முன்னாள் ஜனாதிபதி தனது நிர்வாகத்தின் முடிவில் எவ்வாறு முக்கிய ஆவணங்களை கையாண்டார் என்பது குறித்த நீதித்துறை விசாரணையின் ஒற்றை பகுதியாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lynne Sladky/AP
மேலும் இந்த தேடுதல் வேட்டை ஜனவரி 6ம் திகதி அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரம் தொடர்பான நீதித்துறையின் தனி விசாரணைக்கும் இவற்றிக்கும் தொடர்பில்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் 15 பெட்டிகளில் முக்கியமான வெள்ளை மாளிகைக்கு சொந்தமான ஆவணங்களை கைப்பற்றியது, இவை முறையற்ற முறையில் Mar-a-Lago-விற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ஜர்னல் அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
Wilfredo Lee/AP
இது ஜனாதிபதி ஆவணங்களை காப்பகப்படுத்துவதற்கான கூட்டாச்சி சட்டத்திற்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: மிரட்டும் சீனா! அடிபணிகிறதா தைவான்? வெளியான முக்கிய தகவல்
டிரம்பின் பாம் பீச் கிளப்பில் நடந்த தேடுதல் தேடுதல் உத்தரவை அங்கீகரித்த நீதிபதி, குற்றம் நடந்ததாக நம்புவதற்கு FBI ஏஜென்சிக்கு சாத்தியமான காரணம் இருப்பதாகவும், மார்-ஏ-லாகோவைத் தேடினால் ஆதாரம் கிடைக்கக்கூடும் என்று நம்பியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது .