உஷார் மக்களே! போன் அழைப்புகளில் பணம் பறிக்கப்படலாம்- ஓர் எச்சரிக்கை செய்தி
தற்போது சாட் ஜிபிடி(ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்கள்(Chatbot) இணைய பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
இது போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்கள் மூலம் ஹேக்கர்கள் மோசடி செய்வதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் (எப்.பி.ஐ) இந்த வாரம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் முன்னெப்போதையும் விட வேகமாக இவர்கள் மோசடி செய்வதாகவும் கூறியுள்ளது.
இதன் உபயோகம் பொதுமக்களிடையே பரவலாகும்போது இன்னும் இது போன்ற மோசடி அதிகமாகும் என ஒரு எப்.பி.ஐ அதிகாரி கூறியுள்ளார்.
டீப்பேக் போன்ற செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மரபான பாதுகாப்பு யுத்திகளை தகர்த்து சாதாரண பொதுமக்களிடம் பணம் பறிப்பு போன்ற பல மோசடியில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் குரலை உற்பத்தி செய்வது அல்லது வீடியோவை மாற்றியமைப்பது போன்றவை மோசடிகாரர்களுக்கான ஒரு வாய்ப்பாக உருவாகி, பல மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இது தவறானவர்கள் கைகளுக்கு சென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
சமீபத்தில் கேரளாவில் ஒருவர் இது போன்ற மோசடியில் 40,000 ரூபாயை இழந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கைபேசியில் தொடர்புகொண்டு, அவரது நண்பரை போன்ற போலியான குரலில் பேசி அவ்வளவு தொகையை பெற்றுள்ளார். இது போன்ற மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதை சட்ட அமலாக்க முகமை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |