பொது இடங்களில் சார்ஜ் செய்வதால் தொலைபேசிகள் ஹேக்காகும் அபாயம்! FBI வழங்கிய எச்சரிக்கை
பொது தொலைபேசி சார்ஜிங் நிலையங்களில் நுகர்வோர் தொலைபேசி சார்ஜ் செய்வதால் நுகர்வோரின் தகவல்கள் ஹேக்காக வாய்ப்புகள் உள்ளது என FBI தெரிவித்துள்ளது.
ஹேக்கிங் என்றால் என்ன?
ஹேக்கிங் என்பது உங்கள் தொலைப்பேசி அல்லது கணினி அமைப்புக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறுவதன் மூலம் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்குகளை சமரசம் செய்யும் செயலாகும். மால்கள் மற்றும் விமான நிலையங்களில் நமது கையடக்க தொலைபேசிகளை சார்ஜ் செய்யும்போது நமது தரவுகள் ஹேக்கர்ஸால் திருடப்படும் வாய்ப்புகள் உள்ளன என FBI இன் டென்வர் கிளையில் இருந்து கடந்த வாரம் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டது.
உங்கள் சொந்த சார்ஜர் மற்றும் யூ.எஸ்.பி கார்டுகளை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லுங்கள்.அதற்கு பதிலாக ஒரு electrical outlet ஐப் பயன்படுத்தவும்" என்று FBI ஏஜென்சி ட்வீட்டில் அறிவுறுத்தியது.
image credit:Istock
உங்கள் தரவுகளை சுலபமாக திருடும் “juice jacking” 2011 ஆம் ஆண்டில், "ஜூஸ் ஜாக்கிங்" எனும் ஒரு ஹாக்கிங் முறை இருந்ததாம். அது எவ்வாறெனில் "உங்கள் தொலைபேசியை பவர் ஸ்டிரிப் அல்லது சார்ஜரில் செருகுவதன் மூலம், உங்கள் தொலைபேசியின் தகவல்களானது உங்கள் அனுமதி இன்றே ஹேக் ஆகிவிடும்.
மேலும் அது உங்கள் எல்லா தரவையும் சேமித்துவிடும்" என்று Authentic8 பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த Drew Paik 2017 ல் பிரபல செய்தி நிறுவனமொன்றிற்கு கூறினார்.
உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தும் வயர் உங்கள் மொபைலில் இருந்து மற்ற சாதனங்களுக்கு தரவை அனுப்பவும் பயன்படுகிறது.
ஆகவே நீங்கள் எங்கு சென்றாலுமே உங்கள் தொலைப்பேசியை பொது இடங்களில் சார்ஜ் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.