FDகளுக்கு 9 சதவிகிதம் வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல்
மூத்த குடிமக்களுக்கு Fixed Deposit அதாவது நிரந்தர வைப்பு நிதியில் 9 சதவிகிதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது நிரந்தர வைப்பு நிதி, இதில் நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் முதலில் எந்த வங்கி சலுகைகள் வழங்குகிறது, எது சிறந்த திட்டமாக இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவில் 9 சதவிகிதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Equitas Small Finance
மூத்த குடிமக்களுக்கு 444 நாட்களுக்கு நிரந்தர வைப்பு நிதிகளுக்கு 9% வட்டி வழங்குகிறது.
14 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலும், மூத்த குடிமக்கள் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.
Unity Small Finance Bank
மூத்த குடிமக்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது.
6 முதல் 201 நாட்கள் வரையிலான FDகளுக்கு 9.25 சதவீத வட்டியையும், 501 நாட்கள் வரையிலான FDகளுக்கு 9.25 சதவீதத்தையும், 1001 நாட்களுக்கான FDகளுக்கு 9.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
Fincare Small Finance
750 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்பு தொகைக்கு 9.11 சதவீதம் வரை வழங்குகிறது.
Jana Small Finance
ஜனா சிறு நிதி வங்கி 1095 நாட்களுக்கு முதிர்ச்சியடையும் தொகைக்கு 9 சதவிகித வட்டியை வழங்குகிறது, இங்கு வட்டி விகிதம் 4.25 சதவீதம் முதல் தொடங்குகிறது.
Suryoday Small Finance
சூர்யோதாய் சிறு நிதி வங்கியிலும் நிரந்தர வைப்பு தொகைக்கான கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது, 2 மற்றும் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 9.10% வட்டியும், 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 9% வட்டியும் வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |