நிலையான வைப்பு தொகை: விரிவான தகவல்
வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரு தொகையை முதலீடு செய்து, அதன் முதிர்வு காலம் வரையில் திரும்பப்பெற முடியாது என்பதே நிலையான வைப்பு தொகை.
விருப்பதற்கு ஏற்ப தெரிவு
வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் விருப்பதற்கு ஏற்ப தெரிவு செய்துகொள்ளலாம்.
ஆனால், நிலையான வைப்புத்தொகையில் வைப்பு வைக்கப்பட்ட நிதியை முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.
முதிர்வு காலம் முடிந்த பின்னர், வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் வாடிக்கையாளருக்கு திரும்பக் கிடைக்கும். மட்டுமின்றி வட்டியை வாடிக்கையாளர்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே மாதந்தோறும் பெற முடியும்.
இதில், வாடிக்கையாளர்கள் வட்டியை மாதந்தோறும் பெறுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, ஆண்டுக்கு ஒருமுறை பெறுவது மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவது என வாடிக்கையாளர்கள் விருப்பதற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு
மேலும், ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முதலீடடு செய்த பின்னர், வட்டி விகிதங்கள் அல்லது சந்தை ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் அது பாதிக்காது என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.
வாடிக்கையாளர் தமது முதலீட்டுத் தொகையை முதிர்வு காலத்திற்கு பின்னர் திரும்ப பெறாமல், மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு மொத்தமாக வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்யவும் முடியும்.
நிலையான வைப்பு தொகையில் குறிப்பிட்ட காலம் வரை பணத்தை திரும்ப பெற முடியாது என்பதால் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டித் தொகையை வங்கிகள் வழங்குகின்றன.
குறைந்தபட்சம் ரூ 1000 முதல் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். மொத்தமாக ரூ 2 கோடிக்கு மேல் முதலீடு செய்வதையும் வங்கிகள் அனுமதிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |