பயம் தான் காரணம்... முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்வதன் பின்னணி
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்வதன் பின்னணி, பின்னர் வருந்த நேரிடும் என்ற பயம் காரணமாகவே என கூறுகின்றனர்.
ஹரி தனியாகவே விழாவில்
மே 6ம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.
@getty
இருப்பினும், அவர் குடும்பத்துடன் அல்லாமல் தனியாகவே விழாவில் கலந்துகொள்வார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், மேகன் மெர்க்கல் அவர்களின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகியோருடன் கலிபோர்னியாவில் இருந்தே நேரலையில் கலந்துகொள்வார் என தெரிவித்துள்ளனர்.
மன்னரின் பேரப்பிள்ளைகள் என்ற போதும் குட்டி இளவரசர் ஆர்ச்சி மற்றும் அவரது சகோதரி லிலிபெட்டுக்கு முடிசூட்டு விழாவில் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் ராணியார் கமிலாவின் பேரப்பிள்ளைகள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.
ஹரியின் பிள்ளைகள் வயதில் மிகவும் சிறியவர்கள் என்பதால் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். மேலும், மன்னரின் ஊரவலம் அல்லது முடிசூட்டு விழா ஊர்வலம் உள்ளிட்ட எந்த நிகழ்விலும் ஹரி கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அது வருந்தும் செயலாக இருக்கும்
செயல்படும் உறுப்பினர் இல்லை என்பதால், இளவரசர் ஹரி பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றும் வாய்ப்பும் அளிக்கப்படாது. சார்லஸ் மன்னரின் வாழ்க்கையில் இதுவொரு முதன்மையான தருணம் என்பது இளவரசர் ஹரி புரிந்துகொண்டுள்ளார் என்பதையே, அவரது இந்த முடிவு உணர்த்துவதாகவும் கூறுகின்றனர்.
@getty
மேலும், முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளாமல் போனால், அது வருந்தும் செயலாக இருக்கும் என இளவரசர் ஹரிக்கு தெரியும் என்றே கூறுகின்றனர். ஹரி - மேகன் தம்பதி முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார்களா இல்லையா என்பது பற்றிய பல மாத ஊகங்களுக்கு இந்த அறிவிப்பு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முடிசூட்டு விழாவிற்கு முன்னர் தமது பிரச்சனை தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சார்லஸ் மற்றும் வில்லியம் ஆகியோரிடம் ஹரி முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.