ரஷ்யா குறித்த பயம்... பிரான்சுடன் கைகோர்க்கும் நாடு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விடயம், பல நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, ஒருவேளை நம்மையும் ரஷ்யா தாக்கினால் என்ன செய்வது என யோசிக்கத் துவங்கியுள்ளன சில நாடுகள்.
பிரான்சுடன் கைகோர்க்கும் நாடு
ரஷ்யா குறித்த அச்சம் காரணமாக, பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இருக்கிறது மால்டோவா நாடு. பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இருநாடுகளும் கையெழுத்திட இருப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைனை ஒட்டி அமைந்துள்ள மால்டோவா சிறிய ராணுவத்தைக் கொண்ட ஒரு நாடாகும். நீண்ட காலமாக ரஷ்யாவுடன் பதற்றமான உறவு நீடிக்கும் நிலையில், ரஷ்ய உக்ரைன் போரில் மால்டோவா உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால், தற்போது பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மால்டோவாவை ஒட்டியுள்ள Transdniestria என்னும் பகுதியில் ரஷ்யப் படைகள் முகாமிட்டுள்ளது அந்நாட்டுக்கு கூடுதல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆகவே, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், மால்டோவா ஜனாதிபதியான Maia Sanduவும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் புதனன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |