உக்ரைன் போரால் சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள அச்சம்: சில பொருட்களுக்கு தட்டுப்பாடு
உக்ரைன் போர் உருவாக்கியுள்ள அச்சம் காரணமாக, சுவிட்சர்லாந்தில் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சுவிஸ் பார்மசிக்களில் காண முடிகிறது.
ஆம், சுவிஸ் பார்மசிக்களிலிருந்து தூக்க மாத்திரைகளையும், அமைதிப்படுத்த உதவும் tranquilizerகளையும், அயோடின் மாத்திரைகளையும் மக்கள் பெருமளவில் வாங்கி வருவதால் அவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக பார்மசி ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
அயோடின், அணுக்கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும்.
ஆக, உக்ரைனில் அணுக்கதிர் உலையில் விபத்து ஏதாவது ஏற்படலாம், அல்லது, புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என சுவிஸ் மக்கள் அஞ்சுவதால், அயோடின் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் பார்மசி ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அணுக்கதிர் அபாயம் ஏற்பட்டுள்ளது என அரசு அறிவித்தால் மட்டுமே அயோடின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்துடன், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அயோடின் மாத்திரைகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.