ஜேர்மனி கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலால் கொந்தளிப்பு: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பலாம் என அச்சம்
ஜேர்மனி கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலால் கொந்தளிப்பு: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பலாம் என அச்சம்ஜேர்மனியில், கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டுள்ள கோபம், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்
வெள்ளிக்கிழமை இரவு, ஜேர்மனியின் Magdeburg நகரில், மக்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்றைக் கொண்டு அதிவேகமாக மோதினார் Taleb al-Abdulmohsen என்னும் சவுதி அரேபியா நாட்டவரான மருத்துவர்.
மோதலின் உக்கிரம் காரணமாக சுமார் 205 பேர் காயமடைந்தார்கள், அவர்களில் 41 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
இந்த பயங்கர சம்பவத்தில் ஒரு 9 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் பலியாக, மக்கள் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பலாம் என அச்சம்
இந்நிலையில், இந்த பயங்கர சம்பவம் ஏற்படுத்தியுள்ள கோபம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்கள் அரசியல் வல்லுனர்கள்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த மறுநாளே, அதவாது, சனிக்கிழமையே, Magdeburg நகரில் சுமார் 500 பேர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலைகளில் பேரணிகளில் இறங்கியுள்ளார்கள்.
அவர்கள் புலம்பெயர்தலுக்கெதிராக கோஷம் எழுப்ப, பொலிசாருடன் மோதலும் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஒருவர், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸை உயிருடன் தோலை உரிக்கவேண்டும் என்று கூறி அவரை மோசமாக விமர்சித்துள்ளார்.
ஆக, கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டுள்ள கோபம், பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |